Last Updated : 04 Jul, 2019 01:51 PM

 

Published : 04 Jul 2019 01:51 PM
Last Updated : 04 Jul 2019 01:51 PM

பூமிக்கடியில் ஒரு கி.மீ. ஆழத்திற்குள் சிக்கிய 34 சுரங்க ஊழியர்கள்: 24 மணிநேரத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்பு

கனடா நாட்டின் பொட்டாஷ் சுரங்கத் தொழிற்சாலை ஒன்றில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணிநேரம் நிலத்தடியில் சிக்கிய பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று நியூட்ரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் உர நிறுவனமான நியூட்ரியனில் ஒரு சேவைப் பிரிவு திடீரென உடைந்தது. தொழிலாளர்கள் உடனடியாக அதைச் சரிசெய்ய பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். 

ஊழியர்கள் மும்முரமாக பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டபோது தற்செயலாக அவர்கள் அனைவரும் நிலத்தடியில் சிக்கிக்கொண்டனர். மேல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 24 மணிநேரம் அவர்கள் சிக்கித் தவித்தனர்.

பின்னர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

"எங்கள் கோரி பொட்டாஷ் தளத்தில் 34 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தின் அடிப்பகுதியில் ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் நிலத்தடியில் சிக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடன் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தன. 

அவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மேற்பரப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்" என்று நியூட்ரியன் செய்தித் தொடர்பாளர் வில் டிக்லி நேற்று (புதன்கிழமை) மாலை தெரிவித்தார்.

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தின் மத்திய புல்வெளி பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான சாஸ்கடூனுக்கு தென்மேற்கே அமைந்துள்ள நிறுவனத்தின் கோரி சுரங்கத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x