

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சிரியா, இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை அமெரிக்கா கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்கும் வகையில் சக் ஹேகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பேற்கும்வரை தற்காலிகமாக அவர் பதவியில் நீடிப்பார் என்று வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எஸ். விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் சிலர் அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.