

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ இந்தோனேசியாவில் வடகிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 36 கிலோ மீட்டர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அதனை நேரில் உணர் ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் குறித்து இந்தோனேசிய நபர் ஒருவர் கூறும்போது, ” நிலநடுக்க அதிர்வுகள் தொடர்ந்து சில நொடிகள் நீடித்தது. கட்டிடங்கள் குலுங்கியததால் அனைவரும் வீதிகளுக்கு வந்துவிட்டனர்” என்றார்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரம் இதுவரை வெளிவரவில்லை.