Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

ஒசாகாவில் ஏற்பட்ட போர் நிறுத்தம்

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆற்றிய உரையால், கடந்த 2 வாரங்களாக சர்வதேச சந்தைகளை உலுக்கி வரும் மோசமான வர்த்தகப் போருக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது. வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக சீனா, ஜப்பான் மீதும் ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்குவதால் இந்தியா மீதும் அமெரிக்கா காட்டமாக இருந்து வந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, ட்ரம்ப்பின் சுருதி குறைந்திருக்கிறது. அதேபோல, ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் நல்ல சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றுவதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், சீனாவுடனும் ஜப்பானுடனும் ஆபத்தான வர்த்தகப் போரைத் தொடங்கினார். அமெரிக்காவின் ஏற்று மதியை விடவும் சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுவ தால் 38,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதாக வும் ஜப்பானுடனான வர்த்தகத்தில் 7,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதாக வும் புகார் தெரிவித்தார் ட்ரம்ப். இந்த இரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறை வான வரி விகிதம் இருப்பதால், அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் கூறினார்.

சீனா தனது தொழில்நுட்பத்தை திருடுவதாகவும் கரன்சி மதிப்பில் மாற்றம் செய்து மோசடி செய்வதாகவும் அமெரிக்கா கூறியது. இரு நாடுகளும் ஏறக்குறைய 30,000 கோடி டாலர் அளவுக்கு வரி விதிப்பதாக மிரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், ஒசாகா மாநாடு மூலம் பதற்றமான சூழல் மாறியுள்ளது.

புதிய வரி விதிப்புகளை நிறுத்தி வைப்பதாகவும் சீன அரசுக்கு மிகவும் நெருக்கமான ஹூவாய் நிறுவனத் துக்கு தேவையான கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அதேபோல, வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக் கும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் விவசாய விளைபொருட்களை வாங்குவோம் என சீனாவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஜப்பானிய நிறுவனங்கள் செய்துள்ள புதிய முதலீடுகள் குறித்து ஜப்பான் பிரதமர் அபே விளக்கியதையடுத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ட்ரம்ப் பதில் அளித்திருக்கிறார். இந்தியாவைப் பொருத்த அளவில் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கோரிக்கைகள் குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலித்து வந்தாலும் தகவல் சேமிப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்த அமெரிக்காவின் கவலை நீங்குவதாக இல்லை. ஒரே ஒரு முறை அமெரிக்க பொருட்களை அதிக அளவில் வாங்கிவிட்டால், வர்த்தகப் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்து விடாது என்பதை அமெரிக்கா உணர வேண்டும். இரு தரப்பு வர்த்தகத்தின் அமைப்பை ஆய்வு செய்வதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

வரி விதிப்பு போர் மற்றும் ஈரான் பிரச்சினையால் கடந்த சில மாதங்களாக நிலவிய பதற்றமான நிலைமை ஒசாகா மாநாடு மூலம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சுமூக மான சூழலுக்கு மாறியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் கோபத்தால் பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டு வளைகுடா நாடுகள் பற்றி எரியுமோ, இதனால் பெரும் பாதிப்பு வருமோ என அமெரிக்காவின் கூட்டாளி நாடு களான ஐரோப்பிய நாடுகளும் பயத்தில் இருந்தன. ஈரானுடன் பேச்சு வார்த்தை தொடர்வது நல்ல விஷயம் தான். ஆனால் தான் நினைப்பது போல ஈரான் நடக்க வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தினால் அது சாத்தியமாகாது. ஒவ்வொரு நாடும் தங்களின் நலனைக் கருத்தில் கொண்டே வெளியுறவுக் கொள்கை களை வகுக்கும் என்பதையும் அமெரிக்காவின் விருப்பப்படி வகுக்காது என்பதையும் அமெரிக்கா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. இரு தரப்பு வர்த்தகம், பாதுகாப்பு, குடி யுரிமை பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் விடுக்கும் அறிக்கைகள் அத்தனை யிலும் அரசியலும் கலந்திருக்கும் என்பது கூட்டாளி நாடுகளுக்கும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் தெரிந்திருக்கும். அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த நாடாக மாற்றுவேன் என்ற கோஷத் தோடு 2016-ல் ஆட்சிக்கு வந்தார் ட்ரம்ப். மீண்டும் அதிபர் ஆவதற்காக, வர்த்தகம், பாதுகாப்பு, குடியுரிமை கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு. ட்ரம்ப்பை தோற்கடிக்க வேண்டுமானால் அவரது உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் எந்த அளவுக்கு தவறானவை என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு, ஜனநாயகக் கட்சியினர் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அந்தக் கட்சியில் ஏறக் குறைய 25 பேர் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றனர். ஆனால் குடியரசுக் கட்சியில் ட்ரம்பைத் தவிர யாரும் போட்டியில் இல்லை என்பதால், அதுவே அவருக்கு சாதகமான அம்சம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x