

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 9 பேர் மாயமாகினர்.
இதுகுறித்து ஹோண்டுராஸ் ராணுவம், ''நாட்டின் வடக்குப் பகுதியில் மோசமான வானிலை காரணமாக புதன்கிழமை மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் 27 பேர் பலியாகினர். 9 பேர் மாயமாகினர். 55 பேர் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.
இந்த காலநிலை மீன் பிடிப்பதற்கு உகந்தது அல்ல என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மிசா தெரிவித்துள்ளார்.
மேலும் 49 பேருடன் மற்றொரு மீன்பிடிப் படகு அதே பகுதியில் மூழ்கியதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.