Last Updated : 03 Jul, 2019 11:08 AM

 

Published : 03 Jul 2019 11:08 AM
Last Updated : 03 Jul 2019 11:08 AM

அமெரிக்காவில் ஹெச்1பி விசா மோசடி செய்த 2 மென்பொறியாளர்கள் உள்பட 4 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் ஹெச்1பி விசா மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி,  2 மென் பொறியாளர்கள் உள்பட 4 இந்தியர்களை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும்  ஹெச்1பி விசா திட்டத்தை தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஹெச்1பி விசா என்பது, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவதற்காக வழங்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 4 இந்தியர்களில் விஜய் மனோ(39), வெங்கட்ரமணா மனனம் (47), பெர்னான்டோ சில்வா (53) 3 பேரும் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சதீஸ் வெமுரி (52) என்பவர் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர்

இவர்கள் 4 பேரையும் 2.50 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பிணையப் பத்திரம் மூலம் ஜாமீனில் நீதிமன்றம் விடுவித்தது.

இதில் நியூவார்க் பெடரல் நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி  நீதிபதி ஸ்டீவன் சி மனியன் முன்னிலையில் சதீஸ் வெமுரி ஆஜராகி ஜாமீன் பெற்றார். கடந்த மாதம் 25-ம் தேதி வெங்கட்ரமணா மனனம், சில்வா இருவரும் நீதிபதி லீடா டன் வெட்ரே முன்னிலையில் ஆஜராகி ஜாமீன்  பெற்றனர். கடந்த 27-ம் தேதி நீதிபதி வெட்ரே முன்னிலையில் மனோ ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

இவர்கள் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2.50 லட்சம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.

இதில் மனோ மற்றும் வெமுரி ஆகியோ 3 பேரும் 2 ஐடி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். தங்களின் நிறுவனத்துக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்திக் கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிடுவார்கள். இவர்கள் நியூஜெர்சியில் புரோகியூர் புரபஷனல்ஸ், கிரைப்டோ ஐடி சொலுஷன் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் சில்வா மற்றும் மனனம் ஆகியோர் நியூஜெர்சியில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x