சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
Updated on
1 min read

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

சூடானில் ராணுவ அட்சிக்கு எதிராக மக்களும், எதிர்க் கட்சி தலைவர்களும் கடந்த சில மாதங்களாகவே போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு எதிராக சூடான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டை நடந்தி வருகிறது. இதில் 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வருகின்ற ஜூலை 14 -ம் தேதி சூடானில் முக்கிய மாகாணங்களில்  ஒத்துழையாமை போராட்டத்துக்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

முன்னதாக சூடானில் 30 ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ள அதிபர் ஒமர் அல் பஷிருக்கு எதிராகப் போராட்டம் வெடித்ததால் அவர் அந்நாட்டு ராணுவத்தால் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அதிகாரம் சூடான் ராணுவத் தலைமையின் கீழ் உள்ளது. இந்த இடைக்கால அரசு இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ராணுவம் ஆட்சியிலிருந்து அகன்று உடனடியாக மக்கள் ஆட்சிக்கு வழிவிட வேண்டும் என்று சூடானில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in