Published : 02 Jul 2019 11:38 AM
Last Updated : 02 Jul 2019 11:38 AM

அமெரிக்காவில் விமான விபத்து: 10 பேர் பலி

அமெரிக்காவில் டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து அமெரிக்க ஊடகங்கள், ”அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள டாலஸ் நகரில் விமான நிலையம் ஒன்றில் பயணிகள் சென்ற விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

 இந்த விபத்தில் அதில் பயணம் செய்த பயணிகள்  8 பேர் உட்பட 10 பேர் பலியாகினர்” என செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த டேவிட் கூறும்போது, ”நான் அந்த விமானம் புறப்பட்டத்தை பார்த்தேன். ஆனால் சிறிது நேரத்தில் அதன் வேகம் குறைந்தது. அதன்பிறகு விமானம் இடதுபக்கமாக சென்றுவிட்டது” என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்தில் பலியானவர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x