

இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும் எதிர்க்கட்சித்தலைவருமான மரியம் நவாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து டான் செய்தி ஊடகம் இன்றைய செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
மண்டி பகாவுதீனில் ஜெயில் சாலையில் நேற்று நள்ளிரவுக்குப் பிந்தைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் எதிர்க்கட்சியான முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர், மரியம் நவாஸ் பேசினார்.
அப்போது அவர் தனது உரையில் இம்ரான்கானைக் குறிப்பிட்டு பேசுகையில்,
"உங்கள் ராஜினாமாவைக் கொடுங்கள், வீட்டிற்குச் செல்லுங்கள், எனது தந்தை ஷெரீப்பை சிறையில் அடைப்பது இப்போதுள்ள சூழலில் மிகவும் குற்றமாகும். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை "மறைக்கப்பட்ட கைகளின் பெரும் அழுத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. நவாஸ், விடுவிக்கப்படுவார், மீண்டும் ஒரு முறை பிரதமராக வருவார் - ஏனெனில் அவருக்கு இப்போதுள்ள நேரம் முன்பை விட சக்தி வாய்ந்தது.
இவ்வாறு மரியம் நவாஸ் பேசினார்.
சனிக்கிழமை லாகூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரியம் பேசுகையில், இந்த வழக்கு தொடர்பான முழு நீதித்துறை நடவடிக்கையும், கடுமையாக சமரசம் செய்யப்பட்டதாகும். அது அவரது தந்தை குற்றவாளி என்றும் அவர் சிறைத்தண்டனை விதிக்க வழிவகுத்தது என்றும் குற்றஞ்சாட்டினார்.
நிர்ப்பந்தத்தால் வழங்கப்பட்ட தண்டனை
அப்போது, ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டார்.
அதில் ஷெரீப்பின் விசுவாசமான தொண்டரான நசீர் பட்டுக்கும், அல்-அஜீசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் ஷெரீப்பிற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தவரும் மற்றும் முதன்மை முதலீட்டு வழக்கில் அவரை விடுவித்தவருமான நீதிபதி மாலிக்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இடையே ஒரு உரையாடலும் இடம்பெற்றிருந்தது.
அதில் நவாஸ் ஷெரீப்புக்கு சிறைத்தண்டனை அளிக்க தான் நிர்பந்திக்கப்பட்டதை நீதிபதி ஒப்புக்கொள்வதைக் காட்டுவதாக இருந்தது.
ஆனால் நேற்று இதற்கு உடனடியாக மறுப்பை தெரிவித்த நீதிபதி மாலிக், மரியாமின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், ஆதாரங்களின் அடிப்படையில் ஷெரீப் குற்றவாளி என்றும் கூறினார்.