

பிலிப்பைன்ஸில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்திற்கு 26 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் இன்று (சனிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 26 பேர் காயமடைந்ததாகவும், பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் மருத்துவமனை, சந்தைப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.