Published : 10 Jul 2019 01:17 PM
Last Updated : 10 Jul 2019 01:17 PM

சிரியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்ப பிரான்ஸ், பிரிட்டன் சம்மதம்

சிரியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டனும், பிரான்ஸும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள், “ பிரான்ஸ், பிரிட்டனிலிருந்து சுமார் 10% முதல் 15% வீரர்கள் சிரியாவுக்கு அனுப்ப அந் நாடுகள் சம்மதித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் பிரான்ஸ், பிரிட்டனிலிருந்து எவ்வளவு வீரர்கள் அனுப்பட உள்ளனர் என்பது ரகசியமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வாரம் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஜெர்மனி நிராக்கரித்தது.

மேலும் இதில் பிரிட்டன் பிரான்ஸுடன் இணைவதற்கு இத்தாலி ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத குழுகளுக்கு எதிராக அமெரிக்கா ராணுவம் தொடர்ந்து சில ஆண்டுகள் சண்டையிட்டு வருகின்றது.

இதில் ஓராளவு வெற்றி அடைந்ததன் விளைவாக அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மிதமுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட தற்போது பிரிட்டனும், பிரான்ஸும் அவர்களது வீரர்களை அனுப்ப சம்மதித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x