

ஈரான் அணு சக்தித் திட்டம் தொடர்பாக உலக வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள சில ஆண்டுகளாக முயன்று வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷெரீப் ஆகியோர் மஸ்கட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஐந்து மணி நேரங்களுக்கும் மேலாக இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். பிறகு, திங்கள் கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
எனினும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.