Published : 29 Jun 2019 04:50 PM
Last Updated : 29 Jun 2019 04:50 PM

ஜமால் கஷோகிஜி கொலைக்கு யாரும் சவுதி தலைவரை குற்றம் சாட்டவில்லை: ட்ரம்ப்

ஜமால் கஷோகிஜி கொலைக்கு சவுதி அரேபிய தலைவரை யாரும்  நேரடியாக குற்றச்சாட்டவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு  வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில்  பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார்.

மேலும்,  ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த ஜி 20 மாநாட்டில் இன்று (சனிக்கிழமை) துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர்கள் ஜமால் கஷோகி மரணம் குறித்து சவுதி இளவரசர் முகமது சல்மானிடம் பேசினீர்களா? என்று கேள்வு எழுப்பினர். அதற்கு ட்ரம்ப், “ இந்த இடத்தில் இது தொடர்பாக பேசுவதை நினைத்து நான் வருத்தம் கொள்கிறேன். ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி தலைவரை யாரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை” என்றார்.

முன்னதாக, ஜமால் கஷோகியின் மரணம் குறித்த முக்கியமான ஆதாரம் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்துக்குள் கொல்லப்பட்ட கஷோகி உடலை மறைப்பதற்காக சவுதி அதிகாரிகள் பேசிக்கொண்ட ஆடியோ வெளியிடப்பட்டது.

அந்த உரையாடலில் பதிவானவர்களில் சவுதி இளவரசர் முகமது சல்மானு மூத்த ஆலோசகராக உள்ள மஹிரின் குரலும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x