Last Updated : 27 Nov, 2014 11:28 AM

 

Published : 27 Nov 2014 11:28 AM
Last Updated : 27 Nov 2014 11:28 AM

எபோலா பலி 5,689 ஆக அதிகரிப்பு: உலக சுகாதார மையம் தகவல்

எபோலா நோய் பாதிப்பு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 5,698-ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் டிசம்பர் 2013-ல் முதலில் ஏற்பட்ட இந்த தொற்று பின்னர் லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளிலும் பரவியது. லைபீரிய நாட்டில்தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குமட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 3,016 ஆகும். சியாரா லியோனில் 1,398 பேர் எபோலாவுக்கு பலியாகியுள்ளனர். கினியாவில் 1,260 பேர் பலியாகியுள்ளனர்.

அதிக அளவு மரணங்களால், ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த நோய்க்கு இதுவரை 5,698 பேர் பலியானதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

நைஜீரியா, செனகல் நாடுகள் எபோலாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. நைஜீரியாவில் 8 பேரும், செனகலில் ஒருவரும் எபோலாவுக்கு பலியாகினர். அதன்பின்னர், இவ்விரு நாடுகளிலும் புதிய தொற்று ஏற்படவில்லை. எனவே இவ்விரு நாடுகளும் அபாயப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x