

டைம் இதழின் 2014-ஆம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் இந்தியாவின் மங்கள்யான் இடம்பெற்றுள்ளது.
“செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை முதல் முயற்சியில் வெற்றியடைந்தவர்கள் இல்லை. அமெரிக்காவினால் முடியவில்லை, ரஷ்யாவினால் முடியவில்லை, ஆனால் செப்டம்பர் 24-ஆம் தேதி இந்தியா சாதித்துக் காட்டியது.
செப்.24 என்ற அந்தத் தினத்தில்தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் மங்கள்யான் சென்றடைந்தது, இது ஒரு தொழில்நுட்ப சாதனை, வேறு எந்த ஆசிய நாடும் இதனைச் செய்து விடமுடியவில்லை” என்று கூறும் டைம் இதழ் மங்கள்யான் விண்கலத்தை "சூப்பர்ஸ்மார்ட் ஸ்பேஸ்கிராஃப்ட்" என்று வர்ணித்துள்ளது.