Published : 04 Aug 2017 10:25 AM
Last Updated : 04 Aug 2017 10:25 AM

ஏலியன்களிடமிருந்து பூமியை காக்க அதிகாரி: விண்ணப்பங்களை வரவேற்கிறது நாசா

வேற்றுகிரகவாசிகளிடமிருந்து (ஏலியன்) பூமியை பாதுகாப்பதற்காக ஒரு அதிகாரியை நியமிக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நாசா வரவேற்கிறது.

இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு கிரகங்களை பாதுகாப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளது நாசா. இதன் அடிப்படையில், கிரகங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, கிரக பாதுகாப்பு அதிகாரி (Planetary Protec tion Officer) பணிக்கு ஆள் தேவைப்படுகிறது.

விண்வெளியில் பணிபுரியும் மனிதர்கள், பிரபஞ்சத்தில் உள்ள பல கிரகங்கள் மற்றும் சந்திரன்களை அசுத்தப்படுத்தாமல் கண்காணிப்பதுதான் இந்த அதி காரியின் முழுநேரப் பணியாக இருக்கும்.

இதுதவிர, வேற்றுகிரகவாசிகளிடமிருந்து பூமியை மாசுபடாமல் பாதுகாப்பதும் இவரது பணியாக இருக்கும். இந்தப் பணியில் நியமிக்கப்படும் நபருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம், சலுகைகள் வழங்கப் படும். இந்த அதிகாரியின் பணிக் காலம் 3 ஆண்டுகள். இது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு உயர் அதிகாரியாக ஓராண்டாவது பணி புரிந்தவராகவும் இருக்க வேண்டும். இயற்பியல், பொறியியல் அல்லது கணித பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அமெரிக்கர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x