

தென் அமெரிக்க நாடான ஈக்வெடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் துறை தரப்பில், "ஈக்வெடாரின் கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 7 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறி அடித்துக் கொண்டு சாலைக்கு ஓடி வந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று ஈக்வெடார் அரசு தெரிவித்துள்ளது.
ஈக்வெடாரில் கடந்த 2016-ம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 7.8-ஆக பதிவான நில நடுக்கத்துக்கு 700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.