Published : 01 Nov 2014 01:56 PM
Last Updated : 01 Nov 2014 01:56 PM

அணு ஆயுத பரவல் தடை : வரைவு தீர்மானத்துக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களித்தது இந்தியா

ஐ.நா. சபையில் கொண்டு வரப் பட்ட அணு ஆயுத பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத் துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அணு ஆயுத தயாரிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் அணு ஆயுத பரவல் தடை வரைவு தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப் பட்டுள்ளது. உலகின் அமைதி நிலவ அனைத்து நாடுகளும் இதனை ஏற்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இந்தியா, கொரியா, இஸ்ரேல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் வரைவு தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 164 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதர வாக வாக்களித்தன.

இது தொடர்பாக இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: அணு ஆயுத பரவல் தடை விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ஏற்கெனவே தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதம் என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் முக்கிய அம்சம். எனவே இந்தியா அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை ஏற்காது. அதே நேரத்தில் உலகின் அனைத்து நாடுகளும் தங்களிடம் உள்ள அணு ஆயதங்களை அழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகள் இப்போது அணு ஆயுதங்களை அதிகம் வைத்துள்ளன. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது. அதனை தயாரிக்க பிற நாடுகளுக்கு உதவி செய்யக் கூடாது என்பது முக்கிய கட்டுப்பாடாகும். அதே நேரத்தில் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உதவலாம். வல்லரசு நாடுகள் மட்டும் தேவையான அளவுக்கு அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, பிற நாடுகளை அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறுவது நியாயமற்றது என்பது இந்தியாவின் கருத்தாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x