

1962 இந்தியாவை 2017 இந்தியாவுடன் ஒப்பிட முடியாது என்று அருண் ஜேட்லி கூறியதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், “1962 இந்தியாவுக்கும் 2017 இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் கூறுவது சரியே அதே போல்தான் சீனாவும் மாறிவிட்டது.
இந்திய அரசு 1890 உடன்படிக்கையை மதிக்க வேண்டும். எல்லையைக் கடந்து வரும் இந்திய படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். எங்களுடைய இறையாண்மையைக் காக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம்.
பூட்டான் கூறியதை ஒரு கேடயமாக இந்தியா பயன்படுத்துகிறது. இந்திய படையினரின் சட்ட விரோத செயல்களுக்கு பூட்டான் கூறியதை ஒரு கேடயமாக இந்தியா பயன்படுத்துகிறது எது சரி எது தவறு என்பதைக் குழப்ப முயற்சிக்கின்றனர், இது விரயமான செயலே.
டோக்லாம் பகுதியில் இந்தியப் படை நுழைந்ததை பூட்டான் முன்பு அறிந்திருக்கவில்லை. ஆனாலும் இந்திய-சீன தரப்பினரிடையே ராஜாங்க தகவல் தொடர்புகள் வழக்கம் போல் நிதானமாகவே உள்ளன” என்றார்.