

தென் சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வரு கிறது. அங்கு செயற்கை தீவை உருவாக்கி விமானப் படைத் தளத் தையும் அமைத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தென்சீனக் கடல் சர்வதேச கடல் எல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது. அந்த உரிமையை நிலை நாட்டும் வகையில் சீனா அமைத் துள்ள செயற்கை தீவு அருகே அமெரிக்க கடற்படையின் போர்க் கப்பல்கள் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஸ்டெதம் என்ற போர்க்கப்பல் சீனாவின் செயற்கை தீவுக்கு மிக அருகில் சென்றது.
இதற்கு சீன வெளியுறவு அமைச் சகம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. “அரசியல், ராணுவரீதி யாக அமெரிக்கா வரம்புமீறி செயல்படுகிறது. இது போன்ற அத்துமீறல்களை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று சீனா எச்சரித்துள்ளது.