உலகம்
நேபாள கால்நடை பலி திருவிழா: 3 லட்சம் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டன
நேபாளத்தின் கதிமாய் கோயிலில் நடைபெற்ற கால்நடை பலி திருவிழாவில் 3 லட்சம் ஆடு, மாடு, எருமைகள் வெட்டப்பட்டுள்ளன.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை பலி திருவிழா நடைபெறு கிறது. கடந்த 2 நாள்களில் 3 லட்சம் ஆடு, மாடு, எருமைகள் வெட்டப்பட்டுள்ளன.
அதிகாரபூர்வமாக நேற்றுடன் திருவிழா நிறைவடைந்து விட்டாலும் இன்னும் சில நாள்கள் கோயில் வளாகத்தில் தொடர்ந்து கால்நடைகள் பலியிடப்படும் என்று பக்தர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் பலி கொடுக்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிடும்.
பிஹாரில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு செல்வது வழக்கம். உச்ச நீதிமன்ற தடை காரணமாக இந்த ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையினர் இந்திய பக்தர்களை நேபாளத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. எனவே எல்லைப் பகுதியிலேயே அவர்கள் கால்நடைகளை வெட்டி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
