தெற்கு சூடானில் தொண்டு நிறுவன ஊழியர்களை இந்திய வீரர்கள் காப்பாற்றினர்

தெற்கு சூடானில் தொண்டு நிறுவன ஊழியர்களை இந்திய வீரர்கள் காப்பாற்றினர்
Updated on
1 min read

தெற்கு சூடானில் கிளர்ச்சிப் படை வீரர்களிடம் சிக்கிய தொண்டு நிறுவன ஊழியர்களை இந்திய அமைதிப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படை முகாமிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் பெரும்பான்மையாகப் பணியாற்றி வருகின்றனர்.

அந்த நாட்டின் பிபோர் நகரில் ஐ.நா. முகாம் உள்ளது. அதன் அருகில் கடந்த 13-ம் தேதி தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்தனர்.

அப்போது 40-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.நா. அமைதிப் படையின் இந்திய வீரர்கள், சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று கிளர்ச்சிப் படை வீரர் களை விரட்டியடித்தனர்.ஆபத் தான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருந்த 12-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு ஊழியர்களை காப்பாற்றி ஐ.நா. முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

இதேபோல மற்றொரு இடத்தி லும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களை சுற்றிவளைக்க கிளர்ச்சிப் படை வீரர்கள் முயற்சி செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்ற இந்திய வீரர்கள் கிளர்ச்சிப் படை வீரர்களின் ஊடுருவல் முயற்சிகளை முறியடித் தனர். மேலும் நகரம் முழுவதும் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

இந்திய வீரர்களின் துணிச்சலை ஐ.நா. சபை வெகுவாக பாராட்டி யுள்ளது. ஐ.நா. அமைதிப் படை யில் சுமார் 7676 இந்திய வீரர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in