

கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியா வெற்றிகரமாக சோதனை நடத்திப் பார்த்தது.
இதையடுத்து வடகொரியா வின் எந்த தாக்குதலையும் சமாளிக்க தயாராகும்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டார். அதன்பின், தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து அந்தப் பகுதியில் போர் பயிற்சிகளை மேற் கொண்டன. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், சர்வதேச விதிமுறைகளை மீறி ஏவுகணை சோதனைகளை நடத்துவது உலக அமைதிக்கு ஆபத்தானது என்று ஐ.நா.வும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இதனால் கோபம் அடைந்த வடகொரியா, ‘தென் கொரியாவை அழிப்பது மிகமிக எளிதானது’ என்று மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. இத் தகவலை தென் கொரியா அரசு ஊடகங்கள் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டன.