

பனாமா நாட்டின் மொசாக் பொன் சேகா சட்ட நிறுவனத்தின் உதவி யுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது.
இப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பெயரும் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரது உறவினர்களிடம் சிறப்பு குழு ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது.
அந்த வரிசையில் நேற்று 6-வது முறையாக சிறப்பு குழுவின் முன்பு நவாஸ் ஷெரீபின் மூத்த மகன் ஹுசைன் நவாஸ் ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.