

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியா வுடன் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்க தயாராக உள்ளோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதனை மறைக்க எல்லையில் வேண்டுமென்றே இந்திய ராணுவம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்க பாகிஸ் தான் தயாராக உள்ளது. காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினை களுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறோம்.
அதேநேரம் காஷ்மீர் மக்களின் போராட்டங்களுக்கு அரசியல், ராஜ்ஜியரீதியில் ஆதரவு அளிப்போம்.
இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதேபோன்ற வாக்கெடுப்பு காஷ்மீரில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.