Published : 29 Jul 2017 10:01 am

Updated : 29 Jul 2017 10:04 am

 

Published : 29 Jul 2017 10:01 AM
Last Updated : 29 Jul 2017 10:04 AM

ஐ.நா. முடிவை வரவேற்றது இந்தியா

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ‘பாண்டேசன் அல்கராமா’ எனும் தொண்டு நிறுவனம் செயல்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்தது. இதுதொடர்பான விவாதம் ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் கடந்த 26-ம் தேதி நடந்தது. அப்போது, அந்த தொண்டு நிறுவனம் மனித உரிமை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. தடை விதித்தது. இதை இந்திய பிரதிநிதி பாலாமி திரிபாதி வரவேற்றுப் பேசும்போது, ‘தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பதில் அதிகப்படியான ஆய்வு தேவை’ என்றார்.

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டேசன் அல்கராமா தொண்டு நிறுவனம் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பால் தொடங்கப்பட்டதாகும். - பிடிஐ



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x