ஜமாத் உத் தவா தலைவர் சயீத்தின் புதிய அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

ஜமாத் உத் தவா தலைவர் சயீத்தின் புதிய அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
Updated on
1 min read

சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாக, ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத்தின் தெரிக் இ ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்ற தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் 166 பேர் பலியாயினர். இந்த கொடூர தாக்குதல் உட்பட இந்தியாவில் பல தாக்குதல் களுக்க மூளையாக செயல்பட்ட வர் சயீத். சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் லாகூரில் 90 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சயீத். அதன்பின், ஜமாத் உத் தவாவுக்கு பதில், ‘தெரிக் இ ஆசாத் ஜம்மு காஷ்மீர்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கினர்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி காஷ்மீர் தினத்தன்று, பாகிஸ்தான் முழுவதும் காஷ்மீர் விடுதலை பேரணிகளை தெரிக் இ ஆசாத் அமைப்பினர் நடத்தினர். அதன்பின் இந்த அமைப்பு பிரபலமானது. இந்நிலையில் சர்வதேச நெருக்கடி காரணமாக தெரிக் இ ஆசாத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

ஜமாத் இ தவா அமைப்பை தடை செய்யப்பட்ட பட்டியலில் கடந்த ஜூன் 8-ம் தேதி பாகிஸ்தான் சேர்த்தது. இந்த தடை பட்டியலில் ஜெய்ஷ் இ முகமது, அல் கய்தா, தெரிக் இ தலிபான், ஜமாத் உத் தவா, லஷ்கர் இ தொய்பா உட்பட 64 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஜமாத் உத் தவாவின் புதிய அமைப்பான தெரிக் இ ஆசாத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடவடிக்கை

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார். அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாவுதீனை சர்வ தேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இதன் மூலம் தீவிர வாத அமைப்புகளுக்குக் கிடைக் கும் நிதி தடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in