

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் (மேலவை) உறுப்பினர் ஜான் மெக்கெய்னுக்கு (80) மூளை புற்றுநோய் இருப்பது தெரியவந் ள்ளது.
கடந்த 2008-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோற்றவர் ஜான் மெக்கெய்ன். இப்போது அதிகாரம் மிக்க செனட் சபை நிலைக் குழு (பாதுகாப்பு) தலைவராக உள்ளார்.
இவரது இடது கண்ணில் ரத்தம் கட்டிக் கொண்டதையடுத்து கடந்த 14-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முதல்நிலை மூளை புற்று நோய் (கிளியோபிளாஸ்டோமா) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய சிகிச்சை அளிப்பது குறித்து அவரது குடும்பத்தினர் மருத்துவர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.