தரைப்படையில் 23 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது சீனா

தரைப்படையில் 23 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது சீனா
Updated on
1 min read

சீன தரைப்படையில் வீரர்களின் எண்ணிக்கையை 23 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகக் குறைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

‘சீன மக்கள் விடுதலை ராணுவம்’ என்றழைக்கப்படும் பிஎல்ஏவை சீரமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர் பாக அந்த நாட்டு ராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான பிஎல்ஏ தினசரி வெளியிட்டுள்ள தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பழைய ராணுவ கட்டமைப்பில் தரைப்படை பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. கடந்த காலங்களில் தரைப்போர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் தரைப்படையும் இதர படைகளும் சரியான விதத்தில் இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. எனவே முப்படைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

தற்போது தரைப்படையில் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 10 லட்சமாகக் குறைக்கப்படும். அதேவேளையில் கடற்படை பலமடங்கு வலுப்படுத்தப்படும். அந்தப் படையில் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்படும். மேலும் ராணுவ தளவாடப் படைப் பிரிவு, ஏவுகணை படைப் பிரிவு ஆகியவை பலப்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in