

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கில் உள்ள கெரேரோ மாநிலத்தின் மிகப்பெரிய நகராக அகாபுல்கோ விளங்குகிறது. போதைப் பொருள் உற்பத்தியின் மையமாக விளங்கும் இந்த நகரம் மெக்சிகோவில் அதிக வன்முறை நிகழும் நகரமாக உள்ளது.
இங்குள்ள சிறையில் நேற்று முன்தினம் அதிகாலை கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு குழுக்களும் கொடூரமான முறையில் தாக்கிக் கொண்டதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
மோதலில் 5 பேர் இறந்ததாக அதிகாரிகள் முதலில் தெரிவித்த னர். ஆனால் 28 கைதிகள் உயிரிழந்தது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சிறை கொண்டுவரப்பட்ட பிறகு, தெரியவந்தது.
கலவரம் நடந்த அகாபுல்கோ சிறை முன்பாக கைதிகளின் உறவினர்கள் குவிந்தனர்.
படம்: ராய்ட்டர்ஸ்