

அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ அகதிகள் வருவதை தடுக்க சூரிய மின்சக்தி சுவர் அமைக்கப்படும் என்று நான் கூறியது நகைச்சுவை இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் கூறியதவாது, நான் நகைச்சுவைக்காக கூறவில்லை அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சூரிய மின்சக்தி சுவர் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. மெக்ஸிகோ எல்லையில் சூரிய மின்சக்தி சுவர் அமைக்கப்படுவதற்கு சிறந்த இடம் இல்லை.
முன்னதாக மெக்ஸிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாட்டு எல்லையில் பிரம்மாண்ட சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார். இதற்கான ஒப்பந்தங்களில் ஜனவரி மாதம் ட்ரம்ப் கையெழுதிட்டார்.
அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை தடுப்புச் சுவர் விவகாரம் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.