

ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உயிரோடுதான் இருக்கிறார் என்று குர்திஷ் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குர்திஷ் தீவிரவாத படை தரப்பில், ”ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உயிரோடு இருக்கிறார். அவர் 99% உயிரோடு இருக்கிறார். எங்களுக்கு அவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அவர் மறைந்து இருக்கிறார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நன்கு தெரியும்.
முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹூசேனின் கீழ் பணியாற்றிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவின் ராக்கா அருகே கடந்த மாதம் 28-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யா கூறியுது.
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்டார் என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி உறுதியாகக் கூறினார். இந்த நிலையில் குர்திஷ் படையினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.