

பிரான்சில் மசூதிக்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர்.
பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள அவிங்னான் நகரத்திலுள்ள மசூதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.
இதில் மசூதிக்கு வெளியே நான்கு பேரும், அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேரும் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்றும் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.