

பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது நாட்டுக்காக சேவை செய்யும் தனி நபர்களுக்கு அந்நாட்டு மன்னர் அல்லது ராணியால் ‘சர்’ பட்டம் (நைட்ஹுட்) வழங்கப்படுகிறது. இதைப் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்பு ‘திரு’ என்பதற்கு பதில் ‘சர்’ என போட்டுக்கொள்ளலாம்.
இதன்படி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘சர்’ பட்டத்தை ராணி 2-ம் எலிசபெத் வழங்கினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மரபணு (டிஎன்ஏ) நிபுணருமான சங்கர் பாலசுப்ரமணியனுக்கு (50) இந்த பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் ஹர்திப் சிங் பெகோல் (கல்வித் துறை), பேராசிரியர் கமல்தீப் சிங் பூய் (மனநல ஆராய்ச்சி) உள்ளிட்ட மேலும் பல இந்தியர்களும் இந்தப் பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பிடித்தனர்.