Published : 09 Feb 2014 02:14 PM
Last Updated : 09 Feb 2014 02:14 PM

தென்னாப்பிரிக்காவில் மே மாதம் பொதுத் தேர்தல்

தென்னாப்பிரிக்காவில் வரும் மே மாதம் 7-ம் தேதி 5-வது பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமா சனிக்கிழமை தெரிவித்தார். இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிலவும் என்பதால் எதிர்பார்க்கப்படுகிறது.

இனவெறி முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த 1994-ம் ஆண்டு முதன்முறையாக ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இனவெறியை எதிர்த்துப் போராடிய நெல்சன் மன்டேலா நாட்டின் முதல் கறுப் பின அதிபரானார்.

தேசத் தந்தை என அந்நாட்டு மக்களால் போற்றப்பட்ட மண்டேலா சமீபத்தில் மரணமடைந்தார். அதன்பிறகு, முதன்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற 4 தேர்தல்களிலும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஊழலை ஒழிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது, வேலை யில்லா திண்டாட்டம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களில் குளறு படி உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஜேக்கப் ஜுமா தலைமையிலான அரசுக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுவதே இதற்குக் காரணம். இதுதவிர, கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் போராட்டமும், வன்முறைச் சம்பவங்களும் நடை பெற்று வருகின்றன.

ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் பிரச்சினை வெடித்துள்ளது. கட்சியி லிருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர் பேரவை தலைவர் ஜூலியஸ் மலேமா, பொருளாதார சுதந்திர போராட்ட வீரர்கள் (இஎப்எப்) என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளது ஆளும் கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தேர்தல் குறித்து அதிபர் ஜுமா கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் நாம் கடைபிடித்து வருவது பெருமை யாக உள்ளது. இதற்காக நாம் கடுமையாக போராடி உள்ளோம். மன்டேலா தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ளார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x