Last Updated : 16 Sep, 2015 04:09 PM

 

Published : 16 Sep 2015 04:09 PM
Last Updated : 16 Sep 2015 04:09 PM

இலங்கைப் போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: 300 பக்க அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் இரு தரப்புமே மனித உரிமைகளை மீறி உள்ளன: போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் - 300 பக்க அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்; இலங்கை அரசுக்கு நெருக்கடி

‘‘இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரண்டுமே போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்’’ என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழ் பெண்கள் பலாத் காரம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரை இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், உள்நாட்டிலேயே நியாயமான விசாரணை நடத்துவோம் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்தபடி, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் நேற்று சமர்ப்பித்தார். 300 பக்க விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் போர் நடந்தபோது ராணுவமும் விடுதலைப் புலிகளும் குற்றங்கள் புரிந்துள்ளனர். அந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். இலங் கையில் அதிபர் பொறுப் பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேனா அரசு, ‘போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான முறை யில் உள்நாட்டு அமைப் பாலே விசாரணை நடத்தப்படும். தற்போது நல்லிணக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் விசாரணை அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இலங்கையில் நடத்தப்பட்டது மனித உரிமைகள் விசாரணைதான். குற்றவியல் விசாரணை அல்ல. எனவே சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

சிறுபான்மை தமிழ் மக்கள், தன்னார்வத் தொண் டர்கள், பத்திரிகையா ளர்கள் என்று பலதரப்பி னரும் பரவலாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் ஏராள மானோரை தூக்கிலிட்டு கொன்றுள்ளனர். மேலும், பொதுமக்களை இலங்கை ராணுவத் தினர் சித்ரவதைக்கு ஆளாக்கி உள்ளனர். பாதுகாக் கப்பட்ட பகுதிகளில் இருந்தவர் களையும் குண்டுகள் வீசி கொன்றுள்ளனர். போர் முடிந்த பின்னர்தான் ராணுவத்தினர் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் பெண்கள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்தால், அதிக கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, 115 சதுர மைல் அளவுக்கு காட்டுப் பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்தப் பகுதியில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக்கொண்டனர். தாக்குதல் நடத்தக் கூடாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், தன்னார்வத் தொண்டு நிறுவன முகாம்கள் மீதெல்லாம் ராணுவத்தினர் குண்டுகள் வீசியுள்ளனர். இவை எல்லாம் சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல்களாகும்.

விடுதலைப் புலிகள் தரப்பில் சிறுவர்கள், ஆண் களை தங்கள் இயக்கத் தில் சேர சொல்லி கட்டாயப் படுத்தி உள்ளனர். தங்க ளுக்கு எதிராக செயல் பட்ட அரசியல் தலை வர்கள், அதிகாரிகள், கல்வி யாளர்கள், பொதுமக்களை புலிகள் இயக்கத்தினர் கொன்றுள்ளனர். போர் முனையில் தற்காப்புக்காக சிறுவர்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று பல தரப்பினரையும் கண்ணிவெடிகள், தற்கொலை படை தாக்குதலில் புலிகள் இயக்கத்தினர் கொன் றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி முறைகளில் அடிப்படை சீர்திருத்தம் ஏற்படுத்த மிகப்பெரிய அளவில் நடவடிக்கை தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றை இலங்கை அரசு சொல்வது போல உள்நாட்டு விசாரணை அமைப்பால் விசாரித்து நீதியை நிலைநாட்டுவது இயலாது. எனவே, சர்வதேச விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அமைப்பது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி முறைகளில் அடிப்படை சீர்திருத்தம் ஏற்படுத்த மிகப்பெரிய அளவில் நடவடிக்கை தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் நடந்துள்ளன. இவற்றை இலங்கை அரசு சொல்வது போல உள்நாட்டு விசாரணை அமைப்பால் விசாரித்து நீதியை நிலைநாட்டுவது இயலாது. எனவே, சர்வதேச விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அமைப்பது அவசியம்.

இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x