Published : 07 Feb 2014 12:31 PM
Last Updated : 07 Feb 2014 12:31 PM

அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம்! வெளியுறவுத்துறை எச்சரிக்கை

தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் தவிர, பாகிஸ்தானுக்குச் செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் தன் குடிமக்களின் பாதுகாப்பு கருதி இந்த பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.

அமெரிக்க அரசுப் பணியாளர்க ளுக்காக லாகூரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் சார்ந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியில் அமெரிக்க குடிமகன்களுக்கான வழக்கமான தூதரக சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட் டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் செல்வ தற்கான பயண எச்சரிக்கை கடந்த செப்டம்பர் 2013-ல் விடுக்கப் பட்டது. அதனை மாற்றி தற்போது புதிய பயண எச்சரிக்கை விடப்படுகிறது. மிக அத்தியாவசியப் பணிகள் இருந்தால் தவிர பாகிஸ்தானுக்குச் செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்’ எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

‘சில வெளிநாட்டு பயங்கர வாத அமைப்புகள் மற்றும் பாகிஸ் தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் முழுவ தும் அமெரிக்கர்களுக்கு பாது காப்பு அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாதிகள் தொடர்ந்து மக்கள், அரசுத் துறைகள், வெளிநாட்டவர்களைத் தாக்கி வருகின்றனர்.

ராணுவம் பாதுகாப்பு அளிக்கும் பகுதிகளில் கூட ஆயுதமேந்திய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்கள் மீது பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரி கிறது.வெளிநாட்டவர்களை கடத்தி பணம் பறிப்பதை பயங்கரவாத குழுக்கள் வழக்கமாகக் கொண்டுள் ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x