

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரின் பொதுப்பணி மற்றும் பொறியியல் துறையின் புதிய இயக்குநராக இந்திய பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெக்சாஸ் மாகாணம் ஹுஸ் டன் நகர பொதுப்பணித் துறையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சுமார் ரூ.13,400 கோடி மதிப்பிலான இந்தத் துறை யின் இயக்குநராக உள்ள டேல் ருதிக், விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, இந்திய-அமெரிக்கரான கருண் ஸ்ரீராமாவை (53) புதிய இயக்கு நராக நியமித்துள்ளார் அந்த நகர மேயர் சில்வெஸ்டர் டர்னர்.
இந்த நியமனத்துக்கு ஹுஸ்டன் நகர கவுன்சில் ஒப்புதல் வழங்கி விட்டால், ஸ்ரீராமா வரும் ஏப்ரல் 3-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள் வார். இதன்மூலம் இந்தப் பதவியைப் பிடித்த முதல் ஆசியர் என்ற பெருமை இவருக்குக் கிடைக்கும்.
ஹைதராபாத்தை பூர்விக மாகக் கொண்ட ஸ்ரீராமா, உஸ் மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும் (கட்டிட பொறியியல்), ரூர்க்கி பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டமும் (நிலநடுக்க பொறியியல்) படித்துள்ளார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், எம்பிஏ மற்றும் கட்டிட பொறியியலில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். கட்டு மானத் துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.