Last Updated : 29 Aug, 2016 09:30 AM

 

Published : 29 Aug 2016 09:30 AM
Last Updated : 29 Aug 2016 09:30 AM

ஒலிம்பிக் போட்டியின்போது வரையப்பட்டது; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது 560 அடி அகல சுவர் ஓவியம்

பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகளின் போது 560 அடி அகலம் கொண்ட சுவரில் வரையப்பட்ட ஓவியம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

‘எட்னியாஸ்’ என்று அழைக்கப் படும் இந்த ஓவியம், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒலிம்பிக் நெடுஞ்சாலையில் உள்ள கை விடப்பட்ட நிலையில் உள்ள ஒரு கிடங்கின் சுவர் மீது வரையப் பட்டது. இந்த ஓவியத்தை வரைய பிரேசில் நாட்டைச் சேர்ந்த எடுவர்டோ கோப்ரா தலைமை யிலான குழுவினர் 45 நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 5 வளையங்களைக் குறிக்கும் வகையில், பல்வேறு கண்டங் களைச் சேர்ந்த 5 பழங்குடியின மக்களின் முகங்களை பிரதிபலிக் கும் வகையில் தெளிப்பு பெயின்ட் (ஸ்பிரே பெயின்ட்) மூலம் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

குறிப்பாக, நியூகினியாவின் ஹுலி, எத்தியோப்பியாவின் முர்சி, தாய்லாந்தின் கயின், ஐரோப்பிய யூனியனின் சுபி மற்றும் அமெரிக்காவின் தபஜோஸ் ஆகிய 5 இனத்தவர்களின் ஓவியம்தான் சுவரில் வரையப்பட்டுள்ளன.

51 அடி உயரம் 560 அடி அகலம் கொண்ட சுவரில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் 3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்த ஓவியத்தை வரைய, 180 பக்கெட் அக்ரிலிக் பெயின்ட், 2,800 ஸ்பிரே பெயின்ட் கேன்கள் மற்றும் 7 ஹைட்ராலிக் லிப்ட்கள் பயன்படுத்தப்பட்டன.

“எந்த கண்டத்தைச் சேர்ந்தவ ராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்தேன்” என்கிறார் கோப்ரா.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x