Published : 05 Mar 2017 11:55 AM
Last Updated : 05 Mar 2017 11:55 AM

சீன பட்ஜெட்டில் ராணுவ ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க முடிவு

சீன பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு 7 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் ஒதுக்கீடு 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்குப் போட்டியாக சீன அரசும் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவை ஒப்பிடும்போது சீனாவின் ராணுவ பட்ஜெட் மிகவும் குறைவு. எனினும் இந்த ஆண்டு ராணுவ பட்ஜெட்டை 7 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் பிரச்சினை காரணமாக சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது. இதேபோல தரைப்படை, விமானப் படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x