எகிப்தில் சர்ச் அருகே பயங்கர குண்டு வெடிப்பு: 21 பேர் பலி; 50 பேர் காயம்

எகிப்தில் சர்ச் அருகே பயங்கர குண்டு வெடிப்பு: 21 பேர் பலி; 50 பேர் காயம்

Published on

எகிப்திய நைல் டெல்டா நகரமான தான்ட்டாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது, 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்ததப் பயங்கரத் தாக்குதலுக்கு இன்னமும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு கோரவில்லை.

ஆனால் சமீபகாலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் எகிப்திய கிறித்துவர்களை இலக்காக்கி தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்தத் தாக்குதலும் ஐஎஸ் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எகிப்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்ட நிலையில் ஐஎஸ் அமைப்பினர் ராணுவ வீரர்கள், போலீஸ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவதிலிருந்து கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி தங்கள் உத்தியை மாற்றியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in