பாகிஸ்தானில் பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாட தடை

பாகிஸ்தானில் பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாட தடை
Updated on
1 min read

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பல்வேறு நகரங்களில் காதலர் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. ஓட்டல்கள், பூங்காக்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. சமூக வலை தளங்களில் காதலர் தினத்துக்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில் காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கக் கோரி அப்துல் வாஷித் என்பவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிபதி ஷாகத் ஆசிஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடக்கூடாது. பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்கள் காதலர் தினத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல் படக்கூடாது. வரம்பு மீறும் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்களை ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கண் காணிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் மெமூன் ஹூசைன் அண்மையில் வெளி யிட்ட அறிக்கையில், காதலர் தினம் இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரா னது. அது மேற்கத்திய கலாச்சாரம். நமது நாட்டுக்கு அத்தகைய கலாச்சாரம் தேவையில்லை. எனவே காதலர் தினத்தை பாகிஸ்தானிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in