

பிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ, "மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விமானநிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேன்செஸ்டர் நகரில் இளைஞர்களும், பதின்பருவத்தினரும் அதிகமாகக் கூடியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட இத் தீவிரவாத தாக்குதல் மனிதத்தின் மீதான தாக்குதல்.
இத்தாக்குதலால் கவலையுற்று உள்ள பிரிட்டன் மக்களுக்கு நியூயார்க்வாசிகள் தோள் கொடுப்பர்" என்றார்.
பிரிட்டனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான மேன்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் பிரிட்டனில் நடந்த மோசமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.