

நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்களானதில் 10 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த 2 பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்தில் ஒரு ரஷ்ய நாட்டு பெண் உட்பட 10 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயங்களுன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.