காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியே: நவாஸ் ஷெரிப்

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியே: நவாஸ் ஷெரிப்
Updated on
1 min read

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியே என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியாவை வெறுப்பேற்றும் விதமாக கொல்லப்பட்ட புர்ஹான் வானியை அதிர்வு ஏற்படுத்திய ஆளுமை என்று வர்ணித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் பற்றிய நாடாளுமன்ற 2 நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்த நவாஸ் ஷெரிப், காஷ்மீர் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் பாராட்டினார்.

“காஷ்மீர் சகோதரர்களிடத்தில் நம் இருதயங்கள் துடித்து அவர்களுடன் மூழ்கியுள்ளது” என்று அவர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் கூறியுள்ளது.

காஷ்மீரில் இந்தியாவின் ‘அடக்குமுறை’ போதும் என்று உலக நாடுகள் வலியுறுத்தும் தருணம் வந்து விட்டது என்று கூறிய நவாஸ் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும் கொல்லப்பட்ட புர்ஹான் வானி காஷ்மீர் இயக்கத்துக்கு புதிய திருப்பம் அளித்துள்ளதாகவும் பேசியுள்ளார்.

காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு பாகிஸ்தான் அற, அரசியல், ராஜிய ஆதரவு அளிக்கும் என்று கூறிய நவாஸ், காஷ்மீர் நிலவரங்கள் குறித்து பிற நாடுகளுக்கு உணர்வூட்ட முக்கிய நாடுகளுக்கு சிறப்புக் குழுவை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு காஷ்மீர் மக்கள் வேதனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் நவாஸ்.

ஷெரிப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் காஷ்மீர் விவகாரம் பற்றி இந்தக் கருத்தரங்கில் கூறும்போது, “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீனம், காஷ்மீர் பிரச்சினைகள் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் கிடக்கின்றன, இந்தியா வலுவான நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் காஷ்மீரில் போராட்டம் ஓயவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in