பன்னாட்டு நீதிபதிகளை நியமிக்கும் ஐநா கோரிக்கையை தைரியமாக நிராகரித்தேன்: இலங்கை அதிபர் சிறிசேனா

பன்னாட்டு நீதிபதிகளை நியமிக்கும் ஐநா கோரிக்கையை தைரியமாக நிராகரித்தேன்: இலங்கை அதிபர் சிறிசேனா
Updated on
1 min read

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அயல்நாட்டு நீதிபதிகள் வேண்டும் என்ற ஐநா-வின் கோரிக்கையை நிராகரிக்கும் தைரியம் தன்னிடம் இருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்தார்.

இலங்கை விடுதலைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவர் பேசிய போது, “இந்த விவகாரத்தில் என்னுடைய முதுகெலும்பின் வலுவை காட்டிவிட்டேன்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “இருவாரங்களுக்கு முன் ஐநா மனித உரிமைகள் தலைவர் சர்வதேச நீதிபதிகள் தேவை என்றார், மறு நாளே அதை தைரியமாக நான் நிராகரித்தேன்” என்றார்.

2015 ஐநா தீர்மானத்தை அமலாக்க இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையத்திடம் இலங்கை கேட்டுள்ளது. அனால் தமிழர் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மான அமலாக்கத்திற்கு கால அவகாசத்தை அனுமதிக்கக் கூடாது என்று மனுஒன்றில் கையெழுத்திட்டு வலியுறுத்தினர். இந்த 2015 தீர்மானத்தில்தான் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐநா தரவுகளின் படி 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் பலியானதாகக் கூறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in