Published : 13 Jan 2014 11:16 AM
Last Updated : 13 Jan 2014 11:16 AM

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு எரிமலைக்குழம்பு பரவி வருவதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் தடுப்பு முகமையின் இயக்குநர் டிரை புடியார்தோ கூறியதாவது:

சுமத்ரா தீவுப் பகுதியில் உள்ள சினபங் என்ற எரிமலை கடந்த 2 வாரங்களாக வெடித்துச் சிதறி வருகிறது. இதன் காரணமாக 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் பாறைத் துகள்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. மேலும் சாம்பல் பரவி வருவதால் அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இந்த எரிமலையிலிருந்து வெளியேறும் சூடான எரிமலைக் குழம்பு அருகில் உள்ள ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுவரை சினபங் எரிமலையைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்து வந்த 25,516 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர் களையும் வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளோம். பூகம்பமும் எரிமலை வெடிப்பும் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ள இந்தோனேசியாவில் உள்ள 129 எரிமலைகளில் சினபங்கும் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x