

ஜப்பானிய மிகச்சிறந்த நாவலாசிரியர் ஹாரூகி முராகாமி 10 ஆண்டுகள் கழித்து தன்னுடைய புதிய சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
''மென் வித்தவுட் வுமன்'' என்ற அந்த புதிய நூல் முரகாமி எழுதிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் அடையும் அனுபவங்களை தனது சொந்த வழிகளில், தானாகவே முயன்று அவரது கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளது.
அழிக்கப்பட்டுவரும் பூனைகள் மற்றும் புகைபிடிக்கும் பார்கள், தனித்த இதயங்கள் மற்றும் மர்மமான பெண்கள், பேஸ்பால் ஆட்டமும், இசைக்குழுவின் ராகங்களும் என்று பேண்டஸியோடு ஒன்றோடுஒன்றாக இணைந்து பின்னப்பட்டு நம்மோடு பேசும் கதைகள் இதில் சொல்லப்பட்டுள்ளன என பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுப்பட்டுள்ளது.
முராகாமி சிறந்த நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளார். 'நார்வேயன் வுட்'. 'தி வைண்ட் அப் பேர்ட் கொராணிக்கல்'. மற்றும் காஃப்கா ஆன் தி ஷோர் அவற்றில் சில. இன்னொரு சமகால கிளாஸிக்காக மிகச்சிறந்த திருகலான நகைச்சுவைகள் மிகுந்த படைப்பொன்றை திரும்பவும் கொண்டுவருகிறோம் என்கிறது பெங்குவின்.
விருதுபெற்ற நாவலாசிரியரின் மற்ற படைப்புகள் 1084, வாட் ஐ டாக் அபவுட் வென் ஐ டாக் அபவுட் ரன்னிங், கலர்லெஸ் சுகுரு டாஸ்கி, மற்றும் ஹிஸ் இயர்ஸ் ஆப பில்கிரிமேஜ், தி ஸ்ட்ரேன்ஜ் லைப்ரரி மற்றும் வைன்ட் பின்பால் ஆகியன. அவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் இவர் தனது நாவல்களை தன்மை முன்னிலையில் எழுதுவது வழக்கம். ஜப்பானிய நாவல்கள் எழுதப்படும் மரபாகவே இது அமைந்துள்ளது. ஜப்பானிய இலக்கியத்தில் குடும்பம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இவரது கதைகள் அவற்றிலிருந்து சற்று விலகிச் செல்கின்றன. சுதந்திரமாகவும் தனிமையாகவும் வாழ விரும்பும் குணாதிசயம் கொண்டவர்களாக முரகாமியின் முக்கிய கதை மாந்தர்கள் விளங்குகிறார்கள்.
அவருக்கென்று வித்தியாசமான அரசியல் பார்வையும் உண்டு. சீனாவும் வட கொரியா மற்றும் தென் கொரியாவும் தங்களது போர்க்கால ஆக்கிரமிப்புகளை இன்னும் தொடர்கிறார்கள். ஆனால் ஜப்பானிய மக்களோ இன்னும் தங்களை தாக்கியவர்களைப் பற்றிய சிறு பிரக்ஞையும் இன்றி இருக்கிறார்கள் என்று கவலைப்படுபவராக இருக்கிறார். முரகாமியின் எழுத்தின் ஊடே ஆங்காங்கே இது வெளிப்படும்.
விருதுபெற்ற நாவலாசிரியரின் மற்ற படைப்புகள் 1084, வாட் ஐ டாக் அபவுட் வென் ஐ டாக் அபவுட் ரன்னிங், கலர்லெஸ் சுகுரு டாஸ்கி, மற்றும் ஹிஸ் இயர்ஸ் ஆப பில்கிரிமேஜ், தி ஸ்ட்ரேன்ஜ் லைப்ரரி மற்றும் வைன்ட் பின்பால் ஆகியன. அவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.