

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த அமித் பிரிவர்தன் மேத்தா, அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இவரை வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆகஸ்ட் மாதம் நியமித்தார். இவரது இந்த நியமனத்துக்கு நாடாளுமன்றத்தின் செனட் நீதித் துறை விவகாரங்கள் குழு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இறுதியாக இந்த நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்து விட் டால், இந்தப் பதவியை ஏற்ற முதல் ஆசிய-பசிபிக்-அமெரிக்கர் என்ற பெருமை மேத்தாவுக்கு கிடைக்கும். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் விர்ஜினியா சட்டக் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ள அமித், இப்போது ஜுக்கர் மேன் ஸ்பீடர் எல்எல்பி (சட்ட ஆலோசனை) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.