

பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற துருக்கி அதிபர் எர்டோகனுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்குவதற்காக துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் எர்டோகன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எர்டோகனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திங்கட்கிழமை இரவு தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக துருக்கி அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் அந்நாட்டு அதிபர் எர்டோகன் வெற்றி பெற்றார்.
துருக்கியைப் பொறுத்தவரை அந்நாட்டின் நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டிருக்கும், ஆனால் அதிபர் பொது வாக்கெடுப்பில் எர்டோகன் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம், துருக்கியில் அதிபர் ஆட்சி முறை அதிக அதிகாரத்துடன் நடைமுறைக்கு வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.